வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மே 2022 (13:04 IST)

மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் பலி

செனகல் நாட்டில் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகள் அடிக்கடி தீ விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. 

 
அந்த வகையில் தலைநகர் டக்கருக்கு கிழக்கே 120 கிமீ (74.56 மைல்) தொலைவில் உள்ள டிவௌவான் நகரில் உள்ள ஒரு பிராந்திய மருத்துவமனையின் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்ததாக செனகல் அதிபர் மேக்கி சால் தெரிவித்தார்.
 
திவவுனேவில் உள்ள மேம் அப்து அஜீஸ் சை டபக் மருத்துவமனையின் நியோனாட்டாலஜி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 11 குழந்தைகள் இறந்ததை நான் வேதனையுடனும் அதிர்ச்சியுடனும் தெரிந்துக்கொண்டேன் என்று சால் தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார். 
 
குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 
 
செனகல் நாட்டில் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவமனைகள் அடிக்கடி தீ விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோல வடக்கு நகரமான லிங்குவேரில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.