ஜப்பானில் தொடர் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின

Webdunia|
FILE
ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 10.03 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தோன்றின. இதற்கு சரியாக எட்டு நிமிடங்கள் கழித்து 3.6 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 160 கி.மீ வடகிழக்கேயும், செயல்படாது இருக்கும் புகுஷிமா அணு உலையிலிருந்து 80 கி.மீ தென்மேற்கேயும் உள்ள இபராகி எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ ஆழம் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்கள் குலுங்கின.
ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :