இந்திய வீரர்களுக்கு பேனர் வைத்துக் கொண்டாட்டம்!

இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டிக்கு பேனர் வைத்த கேரள ரசிகர்கள்

Facebook, Twitter

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கர்யவட்டொம் மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

இந்திய அணியை வரவேற்கும் விதமாக கேரள ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

கேரள மண்ணின் மைந்தனான சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனிக்கும் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Facebook, Twitter

ஒப்பீட்டளவில் ரோகித் சர்மாவை விட விராட் கோலிக்கு பெரிய கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.

Facebook, Twitter

இன்று நடைபெற உள்ள டி20 போட்டியை காண கேரள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.