கார்த்திகையில் கந்தனை வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கார்த்திகை மாதத்தில் முருகபெருமானுக்கு விரதம் இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் பலன்கள்!

Various Source

முருகபெருமான் விசாக நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகையிலும் சிறப்பு கொள்கிறார்.

இந்த கார்த்திகை மாதத்தில் முருகபெருமானுக்கு விரதமிருந்து வணக்கினால் கல்வி, செல்வம், சௌபாக்கியம் அனைத்தும் கிடைக்கும் என ஈசன் அருளினார்.

சூரனை வதம் செய்த முருகபெருமானுக்கு கார்த்திகை பௌர்ணமிக்கு முதல்நாள்தான் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேக வைபவம் தீபத்திற்கு முதல் நாள் நடக்கிறது.

இப்படியாக கார்த்திகையில் அதிக சிறப்புகளை கொண்டிருக்கும் முருகபெருமானுக்கு செவ்வாய், சஷ்டி விரதம் போல கார்த்திகை விரதமும் அவசியமானது.

கார்த்திகை பௌர்ணமி நாளில் சந்தன அபிஷேகம் செய்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Various Source

வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய் தீபம் ஏற்றி, தீப ஒளியில் தானம் வழங்கினால் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.

Various Source

கார்த்திகை விரத நாளில் கார்த்திகை புராணம் கேட்டால் ஏழ்மை விலகி செல்வம் பெருகும்

சஷ்டிக்கு 6 நாள் விரதமிருக்க இயலாதவர்கள் கார்த்திகை பௌர்ணமி விரதம் மூலம் 6 நாள் விரதமிருந்த பலனை பெற முடியும்.