சௌபாக்கியங்களை வழங்கும் கார்த்திகை மாதம்! இதை செய்ய மறக்காதீங்க!

கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள் மற்றும் விரதங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்

Pixabay

கார்த்திகை மாதம் முருகனுக்கு விஷேசமானதாகும். வைகாசியில் பிறந்திருந்தாலும் கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் கார்த்திகை முருகனுக்குரியது.

கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று தீபத் திருநாளில் முருக பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது தீராத குறைகளையும் தீர்க்கும்

கார்த்திகையில் தினமும் விளக்கேற்றாவிட்டாலும் துவாதசி, பௌர்ணமி, சதுர்த்தசி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமாவது விளக்கேற்ற வேண்டும்.

கார்த்திகையில் முருக பெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்வது குழந்தை பாக்கியத்தை அளிக்கும்.

கார்த்திகை பௌர்ணமியில் மேற்கொள்ளும் கிரிவலத்தால் சிவபெருமானின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்

Pixabay

கார்த்திகை திங்கள்கிழமைகளில் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றால நாதரை வழிபட்டால் இந்த ஜென்ம பாவங்கள் நீங்கும்.

Pixabay

கார்த்திகை விரதம் இருப்பதுடன் காவேரியில் நீராடி தீபம், வெங்கல பாத்திரம், தானியம் தானம் செய்தால் செல்வம் சேரும்

Pixabay

கார்த்திகை மாதம் துவாதசியில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் கங்கையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலனை பெற முடியும்.

கார்த்திகை மாதத்தில் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதன் மூலம் சகல நன்மைகளும் கிட்டும்.