கார்த்திகை தீபம்: எத்தனை முகம் ஏற்றினால் என்னென்ன பலன்? தெரிந்து கொள்ளுங்கள்!

கார்த்திகை தீபம் ஏற்றும் வழிமுறைகள், திசைகள் மற்றும் பலன்கள்

Pixabay

திருக்கார்த்திகை அன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் விலகும்.

மேற்கு திசை நோக்கி ஏற்றும் தீபம் கடன் தொல்லைகள் நீங்க உதவும்.

திருமணம் ஆகாதவர்கள் வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விரைவில் திருமண வரன் அமையும்.

தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

கார்த்திகையன்று வீடுகளில் 27 தீபங்கள் ஏற்றுவது சகல நன்மைகளையும் பெற்று தரும். குத்து விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறப்பு வாய்ந்தது.

ஒரு முகமாக (ஒரு திரி) தீபம் ஏற்றினார் நினைத்த செயல்கள் நடைபெறும்

குடும்பம் சிறந்து விளங்க இரண்டு முக தீபம் (இரண்டு திரி) ஏற்றலாம்

குழந்தை தோஷங்கள் நீங்க வேண்டுபவர்கள் மூன்று முகம் (மூன்று திரி) தீபத்தை ஏற்ற வேண்டும்.

நான்கு முக (திரி) தீபம் ஏற்றினால் இல்லத்தில், தொழிலில் செல்வம் பெருகும்

ஐந்து முக (திரி) தீபம் சகல நன்மைகளையும் தர வல்லது. பெரும்பாலும் மக்கள் ஐந்து முக தீபங்களையே ஏற்றுகின்றனர்.