பரணி தீபம்: விளக்கேற்றும் முறைகள், கிடைக்கும் நன்மைகள்!

கார்த்திகை மாதத்தில் ‘பரணி தீபம்’ ஏற்றும் நேரம், முறை மற்றும் நன்மைகள்!

Various Source

கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்

அதிகாலையில் அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்படும்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது.

சகல பாவங்களும் விலக திருக்கார்த்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தன்று மாலை வீடுகளில் விளக்கேற்றி, கோவில்களிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

திருகார்த்திகை அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும்.

Various Source

வீட்டு வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் ஐந்து தீபங்களும் ஏற்ற வேண்டும். இந்த ஐந்து தீபங்களையும் வட்டமாக ஏற்ற வேண்டும்.

Various Source

நெய் ஊற்றி ஏற்றினால் சிறப்பு. பஞ்சு திரிகளை பயன்படுத்துதல் சிறப்பு. பழைய விளக்குகளை சுத்தபடுத்தி ஏற்றலாம்.

Various Source

விளக்குகளில் நல்லெண்ணையையும், முருகன் முன் ஏற்றும் விளக்கில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.