ஸ்வாமியே சரணம் ஐயப்பா! ஐயப்ப சாமிகளுக்கான விரத வழிபாட்டு முறைகள்!
கார்த்திகை மாதம் ஐயப்பன் கோவில் விரதமிருக்கும் சாமிகள் கடைபிடிக்க வேண்டியவை!
Various Source
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டியதில்லை.
துளசிமணி மற்றும் ருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக வாங்கி ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றை இணைத்து அணிய வேண்டும்.
நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும்.
மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மற்றும் குடும்பத்தினர் தடுக்கக் கூடாது.
விரதங்களில் ஒழுங்குடன் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை சுத்தமாக நீக்கவேண்டும்.
Various Source
அதிகாலை, பின்மாலை இரு நேரத்திலும் வெறும் நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும்.
Various Source
படுக்கை, தலையணைகளை தவிர்த்துவிட்டு, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும். செருப்பு அணிதல் கூடாது.
Various Source
திருட்டு, சீட்டு ஆடுதல், கேளிக்கை, மது, புகைபிடித்தல், சுற்றுலா, திரைப்படங்கள் பார்த்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
யாத்திரை நல்லபடியாக முடிந்ததும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்து விட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.