குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க குவிக் டிப்ஸ்!

குளிர்காலத்தில் தோல் ஈரப்பதம் மற்றும் இயற்கை எண்ணெய்களை இழக்கிறது. சருமத்தை எப்படி பாதுகாப்பது என பார்ப்போம்...

Pexels

சூடான நீரில் குளிப்பதையும் அதிகம் நேரம் எடுத்துக்கொண்டு குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நிமிடங்களில் குளித்து முடிப்பது சிறந்தது.

ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாய்ஸ்சரைசரை தடவவும். குறிப்பாக காலை மற்றும் படுக்கைக்கு முன்.

குறிப்பாக இரவில் அதிக மாய்ஸ்சரைசர் அல்லது ஸ்லீப்பிங் கிரீம் பயன்படுத்தவும்.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

சருமத்தை போல உதடுகள் சற்று வறண்டு போகத் தொடங்கும் போது தாராளமாக லிப் பாம் தடவலாம்.

பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடுவது முக்கியம்.

கடினமாக இருந்தாலும் உடற்பயிற்சி நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியமானது.