இரவு 7 மணிக்குள் டின்னரை முடித்துவிட வேண்டும்... ஏன் தெரியுமா?

தற்போதைய கால கட்டத்தில் இரவில் சிலர் 10 மணி, 11 மணி, 12 மணி என சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

Pexels

ஆனால் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத இருந்தாலும் அதை முடிந்தவரை கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.

இரவு 7 மணிக்கு முன்பாக இரவு உணவை சாப்பிட்டால் ஜீரணம் ஆவதற்கு தேவையான நேரம் கிடைக்கும்.

இதுவே தாமதமாக சாப்பிட்டு அதிகாலை சீக்கிரம் எழுந்தால் ஜீரணம் ஆவதற்கு தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இரவில் தாமதமாக சாப்பிட்டால் உணவு ஜீரணமாக அதிகமாக நேரம் எடுத்துக் கொள்வதால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

Pexels

இதனால் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டு, உடல் ஆரோகியத்திற்கு கேடு என்றும் கூறப்படுகிறது.

Pexels

மேலும் தூங்குவதற்கு குறைந்தது 3 மணி நேரத்துக்கு முன்பு உணவு எடுத்துக் கொண்டால் தான் சர்க்கரை அளவு சரியாக இருக்கும்.

Pexels