வீகன் டயட் இருப்பதால் ஆபத்தா?

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள டயட் வகையில் வீகனிஸம் ஒன்று. உயிரினங்கள் மற்றும் அதுசார்ந்த அனைத்து பொருட்களையும் தவிர்த்து தாவரங்களை மட்டுமே சாப்பிடும் இந்த உணவு முறை நல்லதா என்பது குறித்து பார்ப்போம்.

Pixabay

வீகன் முறையில் உள்ள தாவர உணவுகளில் கொழுப்பு இல்லாததால் உடல் எடை வேகமாக குறைகிறது.

வீகன் உணவுமுறை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

வீகன் முறையில் இறைச்சி மட்டுமல்லாமல் பால், முட்டை என உயிரினங்கள் சார்ந்த உணவு வகைகள் முழுவதும் தவிர்க்கப்படுகிறது.

ஆனால் இறைச்சி, அதுசார்ந்த சத்துக்களை தாவரங்கள் மூலமாக பெற கடினமாக இருக்கும்.

Pixabay

உதாரணமாக பசும்பாலில் கிடைக்கும் கால்சியத்தை சோயா பால், பாதாம் பால் போன்றவற்றின் மூலம் பெற அதிகளவு உட்கொள்ள வேண்டிவரும்.

Pixabay

இறைச்சிகள் மூலம் கிடைக்கும் பல மைக்ரோ நியூட்ரியண்ட்கள் வீகன் உணவில் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்து தேவைப்படுவதால் அவர்கள் வீகன் டயட்டை தவிர்ப்பது நல்லது.