யாரெல்லாம் இஞ்சி டீயை குடிப்பதை தவிர்க்கனும்?

இஞ்சியில் அதிக அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. பல்வேறு மருத்துவ குணம் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இஞ்சி டீயும் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதுகுறித்து காண்போம்.

Instagram

அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, ஒமட்டல், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இஞ்சியில் அதிகமாகவே உள்ளது.

இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் செரிமான அமைப்பு பாதித்து வாய் எரிச்சல், வயிற்றுப்போக்கு என பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் நமது உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து அசிடிட்டியை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் இஞ்சி டீயை அதிக அளவில் குடிக்கக் கூடாது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நோய் ஏற்படுத்துகிறது.

Instagram

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை ஏற்படுத்துகிறது.

Instagram

இஞ்சி டீயை அதிக அளவில் குடிப்பதனால் அமைதியற்ற நிலை, தூக்கமின்மை ஏற்பட்டு நெஞ்சு எரிச்சல் அதிகமாகி உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

பித்தப்பை கல் பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடிப்பதனால் பித்த நீர் அதிகமாக சுரந்து மிகுந்த வலியை ஏற்படுத்தும்.