யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது??

இந்திய பாரம்பரிய உணவுகளின் ( இனிப்பு, காரம்) இடத்தில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு.

Webdunia

சாப்பாட்டில் நெய் சேர்த்தால் கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது.

சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும், சூடு இல்லாத ஆறிப்போன உணவுகளில் நெய்யை கலக்கக் கூடாது.

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள், குறிப்பாக அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்கவும்

Irritable Bowel Syndrome மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக மழைக்காலத்தில்.

கர்ப்பிணிகள் நெய் சாப்பிடும் போது இரட்டிப்பு கவனம் தேவை. குறிப்பாக அதிக உடல் எடையுடையோர் நெய் உட்கொள்வதை குறைக்கவும்.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய் உள்ளவர்களும் உணவில் நெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.