வெறும் வயிற்றில் எந்த ஜூஸ் குடித்தால் நல்லது..?

காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது உடலுக்கு தேவையான சத்துக்களையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். காலையிலேயே வெறும் வயிற்றில் எந்தெந்த ஜூஸை பருகலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Various Source

வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து பசியை தூண்டும்.

வேப்பிலை ஜூஸ் கசப்பானது என்றாலும் உடலின் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுகிறது.

காலை வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் விட்டமின் ஏ சத்து காரணமாக கண் பார்வை மேம்படும்.

பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களில் இருந்து காக்கிறது.

Various Source

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் சிறுநீர் பாதை தொற்றுகள் சரியாகி சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறைக்க உதவுகிறது

அருகம்புல் ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் செரிமான பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.