கர்ப்பிணிகள் இதையெல்லாம் தொடவே கூடாது?

பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, சில பொருட்களை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

Pixabay

சுறா, வாள்மீன், சூரை மீன்களை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.

பச்சையான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உட்கொள்ளக் கூடாது, ஏனெனில் அதில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் அதிகப்படியான காஃபின் உட்கொள்வது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் மற்றும் குறைந்த எடைக்கு வழிவகுக்கும்.

முளைக்கட்டிய தானியங்கள் பாக்டீரியாவால் மாசுபடலாம். எனவே சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி மட்டுமே சாப்பிட வேண்டும்.

பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் மற்றும் சீஸ் போன்ற உணவுகள் பாக்டீரியா தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன.

கர்ப்ப காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது அதிக எடையை ஏற்படுத்தும்.

கர்ப்ப கால உணவு முறை கட்டுப்பாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.