அளவுக்கு அதிகமாக பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
பழ வகைகள் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளை அளிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதேசமயம் அதிகமாக பழங்கள் சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை அளிப்பதல்ல. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்..
Various Source
பழங்களில் விட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம் என பல்வேறு வகையான சத்துக்களும் அடங்கியுள்ளது
பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் பிரக்டோஸ் லிபோஜெனசிஸ் எனப்படும் செயல்பாடு கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கிறது.
இவ்வாறு அதிகரிக்கும் கொழுப்பினால் கல்லீரல் நோய்கள் உண்டாகும் ஆபத்து உள்ளது.
அதிக பழங்கள் சாப்பிடுவதால் அதிகரிக்கும் ப்ரக்டோஸ் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது.
Various Source
மேலும் அதிகமான பழங்கள் சாப்பிடுவதால் நீர்ச்சத்து அதிகரித்து வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு சில பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏப்பம், வாயு தொல்லைகள் ஏற்படலாம்.
பெரும்பாலும் ப்ரூட் சாலட்டுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதும், இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.