வெயில் நேரத்தில் காரமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

இன்றைய காலகட்டத்தில் காரசாரமாக சாப்பிடுவது பலருக்கு விருப்பமாக உள்ளது. ஆனால் அதிக காரம் எடுத்துக் கொள்வது உடலில் பல்வேறு கேடுகளை விளைவிக்கக் கூடியது. காரத்தின் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்..

Various Source

காரம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிட்டால் வயிறு மற்றும் மார்பில் தொடர்ந்து எரிச்சல் ஏற்படும்.

சிவப்பு மிளகாய் போன்ற காரமான உணவை சாப்பிடும்போது குடலில் ஏற்படும் அழற்சியால் வயிற்றுபோக்கு ஏற்படும்.

காரமான உணவுகள் நாக்குகளை பாதிப்பதால் வாயில் எரிச்சல், வாய்ப்புண் ஆகியவை ஏற்படும்.

காரமான உணவுகள் உடலுக்குள் சென்று ஜீரணமாக முயலும்போது உடல் சூட்டை அதிகரிக்கும்.

Various Source

அவ்வாறாக உடல்சூடு அதிகரிப்பதால் மலவாய் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது.

அதிகமான கார உணவுகள் குடலில் புண்களை ஏற்படுத்தி பல பாதிப்புகளை உண்டாக்கும்.

மிளகாய் சார்ந்த கார உணவுகள் அதிகம் சாப்பிடுவது சுவாச பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.