நான்ஸ்டிக் பாத்திரங்களில் தொடர்ந்து சமைத்தால் என்ன ஆகும்?
பெரும்பாலும் இன்றைய காலக்கட்டத்தில் சமையலுக்கு நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. நான் ஸ்டிக் பாத்திரத்தின் நன்மைகள், தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Various source
நான்ஸ்டிக் பாத்திரங்களில் டெஃப்ளான் என்ற ரசாயன பூச்சு மேலே பூசப்படுகிறது.
இதனால் குறைவான எண்ணெய்யில் சமைக்க முடிவதுடன் எளிதாக பாத்திரத்தை கழுவவும் முடிகிறது.
அதிக வெப்பத்தில் சமைக்கும்போது பாத்திரங்களின் டெஃப்ளான் பூச்சு காற்றில் நச்சை வெளியிடுகிறது.
இந்த புகையை உள்ளிழுப்பதும், உணவை சாப்பிடுவதும் சில எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
Various source
டெஃப்ளான் பூச்சுகளின் ஆயுட்காலம் முடிந்ததும் அவை தேய்மானம் அடைய தொடங்குகின்றன.
Various source
அவ்வாறாக தேய்மானம் அடைந்த நான்ஸ்டிக் பாத்திரத்தில் தொடர்ந்து சமைப்பது ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
நான்ஸ்டிக் பாத்திரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.