ஸ்ட்ராபெர்ரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

புளூபெர்ரி மற்றும் ஸ்ட்ராபெரி இரண்டிலும் செல் சேதத்தை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

Various source

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்புரை மற்றும் குருட்டுத்தன்மையைத் தடுப்பதில் நன்மை பயக்கும்.

பெர்ரிகளில் உள்ள வைட்டமின்கள் இதயம் மற்றும் ரத்த ஓட்ட அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.

ஸ்ட்ராபெரி பழங்களை உட்கொள்வதால் வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் ஏராளமாக இருப்பதால், இது மூட்டுவலி வராமல் தடுக்கிறது.

Various source

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி வகை 2 நீரிழிவு மற்றும் இதய ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

இந்த பெர்ரிகளில் மூளைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளதால் நினைவு திறனை மேம்படுத்தும்.