தர்பூசணி மற்றும் தயிரை வைத்து செய்யும் ஸ்மூதியின் நன்மைகள்!

இந்த வெயில் காலத்தில் உங்கள் தாகத்தைத் தணிக்க தர்பூசணி-தயிர் ஸ்மூத்தி சிறந்த வழியாகும். இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

Various Source

இந்த தர்பூசணி, தயிர் ஸ்மூத்தியை தயாரிக்க பத்து நிமிடங்கள் மட்டுமே ஆகும்

உங்களுக்குத் தேவையானது: இரண்டு கப் தர்பூசணி, அரை கப் தயிர் (குறைந்த கொழுப்பு) மற்றும் புதினா இலைகள்

நறுக்கிய தர்பூசணியிலிருந்து விதைகளை நீக்கி மிக்சி ஜாடியில் போடவும்

தயிர் மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கவும், நான்கு அல்லது ஐந்து புதினா இலைகள் போதும்

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து மிக்சியில் நன்கு கலக்கவும்

இவற்றை மிக்சியில் கலக்கும்போது செயற்கை இனிப்புகளைச் சேர்க்க வேண்டாம்

இது குறைந்த கலோரி பானம் என்பதால், இது உடலுக்கும் நல்லது.

தாகத்தையும், உடல் சூட்டையும் தணிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும்