சத்தான சுவையான மொச்சைக்கொட்டை குழம்பு செய்வது எப்படி?

கிராமங்களில் செய்யப்படும் சத்தான சமையல்களில் மொச்சைக்கொட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. மொச்சைக்கொட்டையை வைத்து கிராமத்து ஸ்டைலில் சுவையான குழம்பு எப்படி வைப்பது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மொச்சைக் கொட்டை, சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தேங்காய் துறுவல், மிளகாய் தூள், கடுகு, உளுந்த், உப்பு

மொச்சை பயறை சிறிதளவு உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் தூள், தேங்காய் துறுவல் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

Various Source

தக்காளி நன்றாக குழையும்போது அரைத்த மசாலா, மொச்சை சேர்த்து தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதி வந்ததும் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான மொச்சைக் குழம்பு தயார்.