வெட்டிவேரின் மகத்துவமான மருத்துவ பயன்கள் தெரியுமா?

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட வெட்டிவேர், ராமச்சம், லாவஞ்சி, குறுவேர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இயற்கை அளித்த அற்புத தாவரங்களில் ஒன்று இந்த வெட்டிவேர்.

Various Source

கால், கைகளில் வலி ஏற்பட்டால் வெட்டி வேரை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் குணமாகும்.

வெட்டிவேரை தண்ணீரில் போட்டு காய்ச்சி பின்னர் வடிகட்டி குடித்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும்.

கோடைக்காலங்களில் மண் பானை தண்ணீரில் வெட்டி வேரை போட்டு வைத்து குடித்தால் சூடு தணியும், தாகம் நீங்கும்.

வெட்டிவேர் பொடியை தண்ணீரில் நன்றாக கொதிக்கவைத்து பின்னர் குடித்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.

வெட்டிவேர் பொடியை கடுக்காயுடன் சேர்த்து ஊற வைத்து தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.

Various Source

உடலில் ஏற்பட்ட தீக்காயங்கள் மீது வெட்டிவேரை அரைத்து தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

Various Source