ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத காய்கறிகள், உணவுப்பொருட்கள்!

பல வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி புழக்கம் அதிகரித்துவிட்டது. பலரும் காய்கறிகள், உணவுப்பொருட்களை அதிகமாக ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் எதையெல்லாம் ப்ரிட்ஜில் வைக்க கூடாது, எதை எவ்வளவு நாள் ப்ரிட்ஜில் வைக்கலாம் என தெரிந்து கொள்வோம்.

Various Source

உருளை, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்காமல் அறை வெப்பநிலையிலேயே வைத்து பயன்படுத்தலாம்.

பீன்ஸ், தக்காளி, கேரட், காள்ஃப்ளவர், போன்ற காய்கறிகளை ஒருநாளைக்கு மேல் பயன்படுத்துவதாக இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

ப்ரிட்ஜில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதில் நுண்ணியிர்கள் உருவாகிவிடும்.

குளிர் பிரதேசத்தில் விளையும் ஆப்பிள், ஸ்ட்ராபெரி போன்ற பழங்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

Various Source

வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கையான பழச்சாறுகளை அதிகபட்சம் 2 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பருகலாம்.

மில்க் ஷேக், ஸ்மூத்தி போன்ற பானங்களை நாட்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து பருகுவது உடல்நல கேட்டை தரும்.

எந்த காய்கறிகள், பழங்களாக இருந்தாலும் ப்ரிட்ஜில் வைத்து 2-3 நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவது நல்லது.