மழைக்கு இதமான சூடான வாழைத்தண்டு ரசம் செய்யலாம் வாங்க!

மழை, குளிர் வந்தாலே சூடாக எதையாவது சாப்பிட மனம் தேடும். அந்த சமயங்களில் ஆரோக்கியமான சூடான உணவாக வாழைத்தண்டு ரசம் உதவும். சுவையான வாழைத்தண்டு ரசம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு, தக்காளி, வர மிளகாய், பூண்டு, ரசப்பொடி, எலுமிச்சை சாறு, பெருங்காயத்தூள், கடுகு, சீரகம், மிளகு, கொத்தமல்லி

வாழைத்தண்டை உரித்து சின்ன துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் அரைத்து சாறு பிழிந்து எடுத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து கொள்ள வேண்டும்.

வர மிளகாய், தக்காளி, பூண்டு மூன்றையும் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வாழைத்தண்டு சாறுடன் கலந்து கொள்ள வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், கொஞ்சம் ரசப்பொடி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து அதனுடன் இந்த வாழைத்தண்டு கலவையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

நல்ல கொதி வந்ததும் அதில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான வாழைத்தண்டு ரசம் தயார்.