உடலை வலுவாக்கும் வல்லாரை சாதம் செய்வது எப்படி?

பலவிதமான மருத்துவ பயன்கள் கொண்ட மூலிகைகளில் வல்லாரை முக்கியமான ஒன்று. நல்ல வாசம் கொண்ட வல்லாரையை கொண்டு சுவையான ஆரோக்கியமான வல்லாரை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையானவை: அரிசி 1 கப், வல்லாரை கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை (வறுத்தது), பெரிய வெங்காயம், மசாலா, உப்பு தேவையான அளவு

முதலில் கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய், பெருங்காய தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து பொடியாக செய்துக் கொள்ள வேண்டும்.

அரிசியை சாதமாக வடித்து பின்னர் அகலமான பாத்திரத்தில் போட்டு ஆற விட வேண்டும்.

பின்னர் வல்லாரை கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகத்துடன் நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.

Various Source

அதனுடன் அரைத்த வல்லாரை கீரை கலவையை சேர்த்து கிளறி, பின்னர் வறுத்து பொடித்த கலவையை சேர்க்க வேண்டும்.

முழுவதுமாக தயாரான இந்த மசாலா கலவையை ஆறிய சாதத்தில் கொட்டி கிளறி விட வேண்டும்.

பின்னர் அதன் மேல் நறுக்கிய மல்லித் தழைகளை தூவி விட்டால் கமகமக்கும் வல்லாரை சாதம் தயார்.