மெட்ராஸ் ஃபேமஸ் வடகறி வீட்டிலேயே செய்வது எப்படி?

சிங்கார சென்னையின் சிறப்பு வாய்ந்த உணவுகளில் ஒன்று வடகறி. தோசை, இட்லிக்கு சுவையான காம்பினேஷனான இந்த வடகறியை சுவையாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: கடலை பருப்பு, வெங்காயம், வரமிளகாய், சோம்பு, லவங்க பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,

கடலை பருப்பை ஊறவைத்து வரமிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதை சிறிய வடைகளாக தட்டி எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு லவங்கம், பட்டை, வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்

அதனுடன் தக்காளியை மசித்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்

பின்னர் பொறித்த வடைகளை உதிரியாக உடைத்துவிட்டு அதனுடன் சேர்த்து தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வடகறி தயார்.

Various source