எந்த சீஸை எந்த உணவுக்கு பயன்படுத்த வேண்டும்?

சமீபகால உணவு முறைகளில் சீஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சீஸில் பல வகைகள் உள்ள நிலையில் எந்த சீஸை எந்த உணவுக்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

Various source

கௌடா சீஸ் வித்தியாசமான நிறம் மற்றும் சுவை கொண்டதாகும். இதை மக்ரோனி, சாண்ட்விட்ச் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.

ஆட்டு பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஃபெட்டா சீஸ் லேசான புளிப்பு, கசப்பு சுவை கொண்டது. பாஸ்தா, பீஸ்ஸாக்களில் பயன்படுத்த ஏற்றது.

சுவிஸ் சீஸ் அழகிய மஞ்சள் நிறத்தில் பெரிய துளைகள் கொண்டது. இதன் செய்முறை மற்றும் உற்பத்தி மிகவும் சிக்கலானது.

எருமை பாலில் இருந்து தயாரிக்கப்படும் மொஸ்ரெல்லா சீஸ் பிரபலமானது. இது பீஸ்ஸா மற்றும் வேகவைத்த உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

Various source

ஆட்டு பாலை மோர் ஆக்கி அதிலிருந்து செய்யப்படுவது ரிக்கோட்டா சீஸ். பன்னீர் போன்ற இது ப்ரெட்டில் வைத்து சாப்பிட ஏற்றது.

பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் ப்ரோவோலான் சீஸ் வெண்ணெய் போன்ற சுவைக் கொண்டது.

ப்ளூ சீஸ் வித்தியாசமான தோற்றம், சுவை கொண்டது. சிறிது துர்நாற்றம் வீசும். ஆனால் சாலட்களில் சேர்த்து சாப்பிட சிறந்தது.