நல்லா தூக்கம் வர நல்ல நாட்டு மருத்துவம்! இதை செஞ்சா போதுமா?

தற்போதைய உலகில் பலரும் தூக்கம் வராமல் அவதிப்பட்டு வருகிறார். சில நாட்டு மருத்துவத்தை மேற்கொண்டாலே நிம்மதியான தூக்கம் நம்மை வந்து தழுவிக் கொள்ளும்.

Various Source

தூக்கமின்மை பிரச்சினை மன அழுத்தம், ரத்த அழுத்தம், தைராய்டு, மெனோபாஸ், மதுப்பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது.

உடல்சூட்டால் தூக்கமின்மை பிரச்சினை வந்தால் அவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். தூங்கும் முன்னர் வயிற்றில் எண்ணெய் வைத்து கொண்டால் சூடு குறையும்.

உள்ளங்கை மற்றும் கால் விரல்களில் மருதாணி பூசினால் உடல் சூடு குறைவதுடன் நல்ல தூக்கம் வரும்.

இரவில் வேக வைத்த பூண்டு பற்களுடன், மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்

கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடிப்பது அல்லது கசகசா துவையல் சாப்பிடுவதும் நல்ல தூக்கத்திற்கு உதவும்.

Various Source

மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மையை சந்திப்பவர்கள் தியானம், யோகாவின் மூலம் மனதை ஒன்றுபடுத்தி மன அழுத்தத்தை குறைக்கலாம்.

Various Source

திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து குடுப்பது, அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து குடிபதுவும் தூங்குவதற்கு நல்ல மருந்து.

தூக்கமின்மைக்கான காரணத்தை அறிந்து அதற்கு ஏற்ப சரியான வழியை பின்பற்றினால் நிம்மதியான தூக்கத்தை அடையலாம்.

Various Source