கோடை காலம் வந்தாலே பலருக்கும் சரும பிரச்சினைகள் வந்து விடுகிறது. கோடைகால சரும பிரச்சினைகளில் இருந்து காக்கும் தக்காளியின் அவசியமான பயன்களை குறித்து தெரிந்துக் கொள்வோம்.
Various Source
தோல் பராமரிப்புக்கு தேவையான கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக உள்ளது.
தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடைக்காலத்தில் ஏற்படும் முகச்சுருக்கங்கள் நீங்கும்.
தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன், பப்பாளி துண்டுகள் சேர்த்து பிசைந்து தோலில் தடவினால் பொலிவடையும்.
தக்காளிச் சாறு சருமத் துளைகளை இறுக்கமாக்கி நல்ல நிறத்தை தருகிறது.
Various Source
தக்காளியுடன் பால், முல்தானி சேர்த்து பிசைந்து தடவி வந்தால் இறந்த செல்கள் நீங்கி வெண்மையான முகமாக மாறும்.
Various Source
கோடைக்கால வறண்ட சருமத்தை பளபளப்பாக்க தக்காளி சாறுடன் வாழைப்பழம், ஆலிவ் ஆயில் சேர்த்து தடவி வரலாம்.
தக்காளி சாறுடன் புதினா இலைகளை சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி வர முகப்பருக்கள் நீங்கும்.