வெயில் காலத்தில் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

அன்றாட உணவில் அதிகம் சேர்க்கப்படும் காய்கறியில் ஒன்று தக்காளி. வெயில் காலத்தில் தக்காளி சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது குறித்து பார்ப்போம்.

Various source

தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி, பி6, நார்ச்சத்து, இரும்புச்சத்து, நீர்ச்சத்து உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்துள்ளன.

தக்காளியில் உள்ள லைகோபீன் கோடைக்கால சருமப் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

தக்காளியில் உள்ள அஸ்ட்ரிஹெண்ட் பண்புகள் தோல் அழற்சி ஏற்படுவதை குறைக்கிறது.

ஆண்கள் தினம் தக்காளி சாப்பிட்டு வந்தால் புரோஸ்டேட் நோயை தடுக்கலாம்.

Various source

தக்காளி சிறுநீர் வெளியேற்றத்திற்கு உதவுவதுடன் உடல் சூட்டையும் குறைக்கிறது.

தக்காளி ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி கல்லீரல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.

தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.