உடையாத குலோப் ஜாமூன் செய்ய இதோ சூப்பர் டிப்ஸ்!!

1. குலாப் ஜாமுன் செய்வதற்கு தரமான பால் பவுடர் பயன்படுத்தவும், அப்பொழுதுதான் குலாப்ஜாமுன் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

Social Media

2. ஒரு பங்கு பால் பவுடருக்கு 3/4 பங்கு சர்க்கரை சரியாக இருக்கும், 1/2 கப் முதல் 1 கப் வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

3. சர்க்கரை பாகில் ஏலக்காய் பொடி சேர்ப்பதற்கு பதிலாக ரோஸ் எசன்ஸ் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.

4. குலாப் ஜாமுன் செய்வதற்கு மாவு பிசையும் பொழுது ஓரளவு பிசுபிசுப்புடன் இருக்கும் படி பிசைந்துகொள்ளவும்.

5. சர்க்கரை பாகு செய்யும் பொழுது பாகு பதம் பார்க்கத் தேவையில்லை, சர்க்கரை உருகி ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடலாம்.

6. குலோப் ஜாமூனை சர்க்கரை பாகில் சேர்த்த பிறகு 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.

Social Media

7. குலோப்ஜாமுன் எண்ணெயில் பொறிப்பதற்கு பதிலாக நெய்யில் பொரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

Social Media

8. குறைவான தீயில் வைத்து பொரிக்கவும், சூடு அதிகமாக இருந்தால் குலோப்ஜாமுன் வெளியே கருப்பாகவும் உள்ளே வேகாமலும் இருக்கும்.

Social Media