பூரி உப்பலாக வர என்ன செய்ய வேண்டும்?

பூரி பலருக்கும் விருப்பமான உணவு. பூரி உப்பி வந்தால்தான் பலருக்கும் மொறு மொறுவென சாப்பிட நன்றாக இருக்கும். உப்பலாக பூரி வருவதற்கு எளிய டிப்ஸை காணலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: 1 கப் கோதுமை மாவு, 2 தேக்கரண்டி ரவா, உப்பு தேவையான அளவு

கோதுமை மாவுடன் ரவையை தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து உடனே தேய்த்து எடுக்க வேண்டும்.

Various Source

மாவை தேய்க்கும்போது ரொட்டியை விட சற்று தடிமனாக இருக்கும்படி தேய்த்தால் பூரி உப்பலாக்க வரும். மிக தடிமனாக தேய்த்துவிட கூடாது.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு பூரியாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

பூரி முறுகலாக வர கோதுமை மாவுடன் ரவா அல்லது மைதா சேர்க்கலாம்.

பூரியுடன் உருளைக் கிழங்கு மசாலா சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Various Source