சாப்பாடு கருகி போச்சா? கவலை வேண்டாம்! சரிசெய்ய சில டிப்ஸ்!
எதிர்பாராத விதமாக உணவு சமைக்கும்போது கருகி போனால் சமாளிக்க சில டிப்ஸ்!
Pixabay
உணவு சமைக்கும்போது எதிர்பாராத விதமாக கருகி போய்விட்டால் அதை சரிசெய்ய சில யுக்திகள் இதோ
பாத்திரத்தின் அடியில் கருக தொடங்கியிருப்பது தெரிந்த உடனே உடனடியாக வேறு பாத்திரத்திற்கு உணவை மாற்றிவிட வேண்டும்.
கருகிய உணவில் அமிலப்பொருட்களை சேர்த்தால் கருகிய வாடை இருக்காது. உணவிற்கேற்ப எலுமிச்சை சாறு, வினிகர், ஒயின் போன்றவற்றை சேர்க்கலாம்.
அசைவ உணவுகள் கருகி விட்டால் அதை சரி செய்ய பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை சேர்க்கலாம்.
அரைத்த இலவங்க பட்டை சேர்த்தாலும் அசைவ உணவுகளில் கருகிய வாசனையை தடுக்கலாம்
கருகிய உணவில் சுவையை மாற்ற நறுக்கிய உருளைக்கிழங்குகளை போட்டு பயன்படுத்தலாம்