பல் துலக்கும் முன்னும் பின்னும் செய்யக்கூடாத விஷயங்கள்!

பல் துலக்குவது தினசரி வாழக்கையை ஆரோக்கியமாக வாழ அவசியமான ஒன்றாகும். ஆனால் பலரும் பல்துலக்குவதை சரியாக செய்வதில்லை. முக்கியமாக பல் துலக்கும் முன்பும், பின்பும் என்ன செய்யக்கூடாது என தெரிந்துக் கொள்ள வேண்டும்.

Various source

காலையில் பலர் எழுந்து காபி, டீ குடித்து விட்டு பல் துலக்க செல்வார்கள். இது தவறான செயல்.

பல் துலக்கிய 30 நிமிடங்களுக்கு பிறகே காபி, டீ அல்லது உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பல் துலக்க செல்லக் கூடாது. 30 நிமிடம் கழித்து துலக்க வேண்டும்

தினசரி காலை மற்றும் இரவில் தவறாமல் பல் துலக்க வேண்டும்.

Various source

பற்களை அவசரகதியில் துலக்கி விட்டு செல்லாமல் 10 நிமிடங்கள் செலவழித்து பொறுமையாக பல் துலக்க வேண்டும்.

Various source

பல் துலக்க பேஸ்ட்டை அதிக அளவிலோ, மிகவும் குறைவாகவோ பயன்படுத்தாமல் சரியான அளவு உபயோகிக்க வேண்டும்.

ப்ரஷ் தேய்ந்து போனால் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது புதிய ப்ரஷ் வாங்க வேண்டும்.