இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படலாம்!?
அன்றாடம் உண்ணும் உணவுகள் பலவற்றில் ஆரோக்கிய நன்மைகளும், கெடுதல்களும் சேர்ந்தே உள்ளன. சில உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அவை ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various source
சீஸ் அதிகம் உள்ள பீட்சாவை அதிகம் சாப்பிடுவதால் ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ப்ரெஞ்சு ப்ரைஸ் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன், இதயத்திற்கு தீங்கினை ஏற்படுத்தலாம்.
கூல்ட்ரிங்ஸை அதிகமாக குடிக்கும்போது உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதால் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஐஸ்க்ரீமில் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளது. இதை அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பு, ரத்த நாள அடைப்புக்கு வழிவகுக்கும்.
Various source
எண்ணெய்யில் வறுக்கப்பட்ட சிக்கன் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும்.
கொழுப்பு அதிகம் நிறைந்த இறைச்சி வகைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ரத்த நாள அடைப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.