குளிர்ச்சி தரும் மதுரை பேமஸ் இளநீர் சர்பத் வீட்டிலேயே செய்யலாம்!

கோடை காலத்தில் ஏற்படும் தாகம், வறட்சியை போக்குவதில் இளநீர் முக்கியமான பானமாகும். இளநீரை வைத்து செய்யப்படும் சர்பத் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. வீட்டிலேயே இளநீர் சர்பத் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: 2 இளநீர், கடல்பாசி, சர்க்கரை, கன்ஸ்டண்ட் மில்க், பால், சப்ஜா விதை,

சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் கடல்பாசி, சர்க்கரை கலந்து ப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து ஜெல்லி போல மாறியிருக்கும் அந்த கலவையை சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

Various source

பாத்திரம் ஒன்றில் காய்ச்சிய பாலை ஊற்றி அதனுடன் கன்ஸ்டண்ட் மில்க், ஊற வைத்த சப்ஜா விதை, தயார் செய்த ஜெல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இளநீரில் உள்ள வழுக்கை சில்லுகளை வழித்து எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான இளநீர் சர்பத் தயார். சுவையான இந்த சர்பத் வெயிலால் ஏற்படும் தோல் பிரச்சினைகளை தடுக்கிறது.