தித்திக்கும் தேங்காய் ரவா லட்டு செய்யலாம் வாங்க!

ரவா லட்டு தமிழகத்தில் பண்டிகை காலங்களில் பல பகுதிகளிலும் தயாரிக்கப்படும் திண்பண்டமாகும். சுவையான தேங்காய் ரவா லட்டு வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: ரவா, சர்க்கரை, தேங்காய், ஏலக்காய், பால், முந்திரி, நெய்,

முந்திரியை நெய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு அரை கிலோ ரவையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சர்க்கரையை அதில் சேர்த்து சிறிது நேரம் கிண்டியபின் தேங்காய் துறுவலை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளற வேண்டும்.

பின்னர் ஏலக்காய் தூள், 2 ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறிவிட்டு எடுக்க வேண்டும்.

சூடான ரவையில் காய்ச்சிய பாலை ஊற்றி உருண்டையாக பிடித்து வைத்தால் தித்திக்கும் தேங்காய் ரவை லட்டு தயார்.