கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: கோதுமை அப்பம் செய்வது எப்படி?
கார்த்திகை தீபம் அன்று வீடுகளில் செய்யும் பலகாரங்களில் அப்பமும் ஒன்று. சுவையான சூப்பரான கோதுமை அப்பத்தை எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், சமையல் சோடா, உப்பு, நெய் அல்லது எண்ணெய்
1 கப் கோதுமை மாவுக்கு 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அரை கப் வெல்லத்தை 200 மிலி தண்ணீர் ஊற்றி, ஏலக்காய் போட்டு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கலந்து வைத்துள்ள மாவில் வெல்லப்பாகு மற்றும் பிசைந்த வாழைப்பழத்தை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளவும்
Various source
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்று சூடு வந்ததும் ஒரு கரண்டு மாவை எடுத்து ஊற்றவும்.
ஒரு முறைக்கு 4 அப்பங்கள் என ஊற்றி சிவந்து வரும்போது இரு பக்கம் திருப்பி விட்டு எடுத்தால் சுவையான கோதுமை அப்பம் தயார்.