சுவையான சுழியம் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான இனிப்பு பதார்த்தங்களில் சுழியமும் (சுசியம்) ஒன்று. வெல்லம், கடலைப்பருப்பு வைத்து செய்யப்படும் சுழியம் உடலுக்கு தீங்கு விளைவிக்காதது. சுவையான சுழியத்தை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்

Various source

தேவையான பொருட்கள்: கடலை பருப்பு, வெல்லம், மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஏலக்காய், தேங்காய் துருவல், நெய்

கடலைப்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேகவிட்டு மசித்துக் கொள்ள வேண்டும்

வெல்லத்துடன் ஏலக்காயை தட்டி சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

வடிகட்டிய வெல்ல நீரை பாத்திரத்தில் வைத்து கொதிக்கவிட்டு கெட்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கெட்டியான வெல்ல பாகுடன் தேங்காய் துருவல், நெய் மற்றும் மசித்த பருப்பை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த கலவையை அடுப்பில் வைத்து சூடு செய்து சற்று கெட்டியாக எடுத்துக் கொண்டால் பூரணம் தயார்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

Various source

தயார் செய்த பூரணத்தை உருட்டி எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சுழியம் தயார்.