மூளை சுறுசுறுப்பாக இயங்க அவசியமான உணவுகள்!

உடலில் உள்ள அனைத்து பகுதிகளும் இயங்க அவசியமாக இருப்பது மூளை. அந்த மூளையை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும் சூப்பரான சில உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Various Source

மூளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உலர் பழங்கள் அவசியமான ஒன்று.

பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் சியா விதைகளில் அமிக்டலின் உள்ளிட்ட மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன.

ஃப்ரீசரில் வைக்கப்படாத புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது மூளை வளர்ச்சிக்கு நல்லது.

இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிர்டெண்ட்கள் நினைவாற்றலையும், மனநிலையையும் மேம்படுத்தும்.

Various Source

பேரீச்சம் பழத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் தாதுக்கள் மூளை ஆற்றலை மேம்படுத்துகின்றது.

அவித்த முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் பி12 சத்துக்கள் மூளை ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

உணவில் அதிகளவு எண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கொள்வது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.