அசத்தலான ருசியில் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்யலாம் வாங்க!

அசைவ பிரியர்களுக்கு அடிக்கடி சாப்பிட தோதான உணவு சிக்கன். சிக்கனை வைத்து மறக்கமுடியாத சுவையில் சூப்பரான நெய் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: சிக்கன், தக்காளி, வரமிளகாய், நெய், புளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு, சீரகம், மல்லித்தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்க வேண்டும்.

பின்னர் வாணலியில் தாரளமாக நெய் ஊற்றி சிக்கனை போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

Various Source

தக்காளி நன்றாக வதங்கி வரும்போது அதனுடன் அந்த கிரேவியுடன் வறுத்த சிக்கனை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

கிளறும்போது கூடுதலாக கொஞ்சம் நெய்யும், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்

கிரேவி சிக்கனுடன் கலந்து நன்றாக வந்ததும் இறக்கி நறுக்கிய கொத்தமல்லியை தூவினால் ருசியான சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.