ஆந்திரா ஸ்டைல் மிளகு முட்டை வறுவல் சூப்பரா செய்யலாம்!

அவித்த முட்டையை வெறுமனே சாப்பிட சிலருக்கு அவ்வளவாக பிடிக்காது. அந்த அவித்த முட்டையுடன் மிளகு தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து வறுத்து எடுத்தால் சுவை நாக்கை சுண்டி இழுக்கும். சுவையான மிளகு முட்டை வறுவல் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: முட்டை, பெரிய வெங்காயம், தக்காளி, வர மிளகாய், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரக தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை,

முதலில் முட்டையை நன்றாக வேகவைத்து ஓடு உரித்து நீளவாக்கில் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதில் அவித்த முட்டைகளை போட்டு வெள்ளைக்கரு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

பின்னர் அதில் வர மிளகாய், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை,தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளி வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுதூள் தேவையான அளவு சேர்த்து கிளறவும்.

தேவைக்கேற்ப சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து மஞ்சள் கரு கரையாமல் கிளறி எடுத்தால் சூப்பரான ஆந்திரா மிளகு முட்டை வறுவல் தயார்.