காராச்சாரமான சோயா சுக்கா செய்வது ரொம்ப ஈஸி!

சைவ உணவுகளில் சுவையூட்டும் உணவுப் பொருட்களில் சோயா முக்கியமானது. தொடுகறியாக சமைக்கும் சோயாவை சூப்பரான சுக்கா ஸ்டைலிலும் செய்து சாப்பிடலாம். அது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: சோயா, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா,

மசாலா அரைக்க: சீரகம், மிளகு, தனியா, வர மிளகாய், தாளிக்க: பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்

1 கப் சோயாவை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்து பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

மசாலா அரைப்பதற்கான பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அடித்துக் கொள்ள வேண்டும்.

பட்டை, கிராம்பு உள்ளிட்ட தாளிப்பதற்கான பொருட்களை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும்

அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக கிளற வேண்டும்.

அதனுடன் சோயாவை சேர்த்து மூடி நன்றாக வேகவிட்டு எடுத்தால் சுவையான சோயா சுக்கா தயார்.

Various source