ஊட்டச்சத்து நிறைந்த சிவப்பு சோள அடை செய்வது எப்படி?

சிவப்பு சோளத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. சோளத்தை வைத்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் சுவையான சிவப்பு சோள அடை எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சிவப்பு சோளம், துவரம் பருப்பு, உளுந்து, பெருங்காயம், வர மிளகாய், பெரிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை

சிவப்பு சோளம், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவற்றை பாத்திரத்து ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் வேகவைக்க வேண்டும்.

ஊறிய பின் தண்ணீரை வடித்து உலர்த்தி அதனுடன் வர மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.

அரைத்த மாவுடன் மஞ்சள் தூள், சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு தோசை சுட்டு எடுப்பது போல கொஞ்சம் மொத்தமாக ஊற்றி எடுக்க வேண்டும்.

சிவப்பு சோள அடைக்கு தேங்காய் சட்னி, புதினா சட்னி வைத்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.