கிச்சன் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!

நாள்தோறும் சமையல் வேலைகள் நடக்கும் சமையலறையில் பல்வேறு துர்நாற்றங்கள் ஏற்படுவது பிரச்சினையாக உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சமயலறையை வாசனையாக்குவது எப்படி என பார்ப்போம்.

Various Source

ஒரு துணியில் கற்பூரத்தை வைத்து மடித்து கிச்சன் மூலைகளில் வைத்தால் துர்நாற்றம் விலகும்.

பஞ்சை எடுத்து எசன்ஷியல் ஆயிலில் நனைத்து கிச்சன் மூலைகளில் வைக்க துர்நாற்றம் விலகும்.

பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து சமையலறையில் ஸ்ப்ரே செய்து வந்தால் துர்நாற்றம் வராது.

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மல்லி, ரோஜா போன்ற வாசனை பூக்களை வைத்தால் துர்நாற்றம் வீசாது.

Various Source

எலுமிச்சை தோல், லவங்கப்பட்டையை நீரில் கொதிக்க வைத்து சமையலறையில் ஸ்ப்ரே செய்தால் வாசமாக இருக்கும்.

Various Source

வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து கிச்சன் முழுவதும் தெளித்தால் துர்நாற்றம் மறையும்.