வேர்க்குருவை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

வெயில் காலம் என்றாலே பலருக்கும் வேர்க்குரு என்ற தோலின் மீது ஏற்படும் சிறு புள்ளிகள் பிரச்சினையாக மாறி வருகின்றன. இவை அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். எளிய வீட்டு மருத்துவம் மூலமாக வேர்க்குருவை நீக்க முடியும்.

Various Source

வேர்க்குரு பொதுவாக கழுத்து பின்புறம், இடுப்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் தோன்றுகிறது.

முல்தானி மிட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து வேர்க்குரு உள்ள பகுதிகளில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும்.

முல்தானி மிட்டி பயன்படுத்துவதால் பூஞ்சை, பாக்டீரியாக்கள் நீங்கி சருமம் பாதுகாப்பு பெறுகிறது.

கற்றாழை ஜெல்லை வேர்க்குரு பாதித்த பகுதிகளில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

Various Source

வேப்பிலையை நீரில் போட்டு காய்ச்சி அதை வேர்க்குரு உள்ள பகுதிகளில் ஊற்றி கழுவினால் வேர்க்குரு கொப்புளங்கள் காய்ந்து மறையும்.

வேர்க்குரு உள்ள பகுதிகளில் தயிரை தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வேர்க்குரு மறையும்.