வயிற்றுப்போக்கை குணமாக்கும் எளிய வீட்டு மருத்துவம்!

அதிக காரமாகவோ அல்லது குடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளையோ சாப்பிடும்போது பலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. வயிற்றுப்போக்கை எளிய வீட்டு மருத்துவத்தின் மூலமாகவே குணப்படுத்த முடியும்.

Various Source

கொய்யா இலைகளை மென்று உண்டால் வயிற்றுப்போக்கு உடனடியாக கட்டுப்படும்.

வாழைப்பூவை காம்பு எடுத்து அரை வேக்காடாக சமைத்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

மாதுளம் பழத்தோலை அரைத்து அதில் சுண்டைக்காய் அளவு உருண்டையாக எடுத்து தயிரில் கலந்து சாப்பிடலாம்.

மாசிக்காயை வறுத்து அரைத்து ஒரு சிட்டிகை எடுத்து அதில் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குறையும்.

Various Source

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் சம அளவு எடுத்து பொடியாக்கி அதனுடன் கற்கண்டு கலந்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர குடல் கோளாறு சரிபடும்.

Various Source

வில்வ மரத்தின் காய், விதை மற்றும் மலர்கள் வயிற்றுப்போக்கை குறைக்கும் தன்மை கொண்டவை.

Various Source

ஆட்டுப்பால் குடிப்பது பித்தம் காரணமாக ஏற்பட்ட பேதியை குணப்படுத்தி உடலுக்கு வலு தரும்.