தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுகளுடன் முக்கியமான இடத்தை பிடிப்பது பலகாரங்கள். தீபாவளிக்கு ஸ்பெஷலான சீப்பு சீடை/சீப்பு முறுக்கு சுவையாக செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various Source
தேவையான பொருட்கள்: அரிசி மாவு, வறுத்து அரைத்த உளுந்து, பாசி பருப்பு பொடி, தேங்காய் பால், உப்பு, எண்ணெய்
உளுந்து பொடி, பருப்பு பொடி தயாரிக்க உளுந்தையும், பாசி பருப்பையும் தனித்தனியாக வறுத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
சீடை இனிப்பாக வர தேவையான அளவு சர்க்கரையை தேங்காய் பாலில் கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, பாசிப்பருப்பு மாவை கலந்து அதில் உப்பு, தேங்காய் பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும்.
Various Source
முறுக்கு குழலில் சீப்பு சீடைக்கான தட்டை வைத்து மாவை வைத்து நீட்டமாக பிழிய வேண்டும்.
Various Source
நீளமாக பிழிந்த மாவை மோதிர வடிவ அளவிற்கு துண்டு துண்டாக நறுக்கி இரு முனைகளையும் ஒட்டி ரவுண்டாக மடக்கி கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்த சீப்பு சீடைகளை போட்டு பொறிக்க வேண்டும்.
நல்ல பொன்னிறத்தில் சீடை வந்ததும் எடுத்து எண்ணெய் வடிந்த பின் காற்று புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஒருவாரம் வரை வைத்து சாப்பிடலாம்.