சம்பா கோதுமையில் பொங்கல் செய்வது எப்படி?

தானிய வகைகளில் சத்து மிகுந்தது சம்பா கோதுமை. இதைக் கொண்டு சுவையான ஆரோக்கியமான சம்பா கோதுமை பொங்கல் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை, ஜாதிக்காய் சிறிதளவு

முந்திரி மற்றும் திராட்சையை நெய் ஊற்றி நன்றாக வறுத்து தயார் செய்து கொள்ள வேண்டும்.

சம்பா கோதுமையை தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்து குழையும் பதத்தில் சர்க்கரையை சேர்த்து கிளறி விடவும்.

Various source

ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடி செய்து அதில் தூவி விடவும்.

Various source

பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை அதில் சேர்க்க வேண்டும்.

மிதமான சூட்டில் கலந்து எடுத்து பரிமாறினால் சுவையான சம்பா கோதுமை பொங்கல் தயார்.