சப்ஜா விதைகளை எதில் கலந்து சாப்பிட வேண்டும்?

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தை குறைக்க பலரும் பழச்சாறுகளை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொஞ்சமாக சப்ஜா விதைகளை சேர்த்து கொள்வது கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து காக்கிறது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Instagram

சப்ஜா விதையில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், விட்டமின்கள் நிறைந்துள்ளது.

வெயில் நேரத்தில் சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்து பழச்சாறு போன்றவற்றில் கலந்து பருகினால் உடல் சூடு குறையும்.

இரவு தூங்கும் முன் ஊற வைத்த சப்ஜா விதைகளை பாலில் கலந்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

சப்ஜா விதையை தேனில் கலந்து பருகி வந்தால் மாதவிடாய், வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

Instagram

சப்ஜா விதைகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி நீளமாக வளர உதவுகிறது.

Instagram

சப்ஜா விதைகளில் உள்ள பொட்டாசியம் சத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கோடை காலத்தில் உடல் சூடு, கண் எரிச்சல் ஏற்படுவதை சப்ஜா விதைகள் சாப்பிடுவதன் மூலம் தடுக்க முடியும்.